பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்திலிருந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் வாழ் மக்களுக்கு, ரூ.10 இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்.
தமிழ் நாட்டில் கடந்த 100 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக அதிகமான மழை தொடர்ந்து பெய்த காரணத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் டெல்டா மாவட்டங்கள் எனப் பல மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அப்பகுதிகளில் வாழும் இலட்சக் கணக்கான மக்கள் தங்களுடைய வீடு. உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். விவசாயிகள் தங்கள் நிலங்களில் வளர்ந்த பயிர்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கியதால் உழைப்பும் பொருட்களும் இழந்து மிகவும் வருந்தித் தவிக்கின்றனர்.
கருநாடகத்தில் வாழுகின்ற தமிழர்கள் சார்பாக, பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைக்காக நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்த பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் உலகத்தமிழ்க் கழகம், கருநாடக இந்து நாடார் சங்கம், எம். வி. ஜே. பள்ளிக் குழுமம், பி.எம். பள்ளி, பால்டுவின் பள்ளி, பொதுமக்கள் மற்றும் பல நன்கொடையாளர்களின் உதவியோடு சுமார் 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான புடவை, வேட்டி, லுங்கி, டீ சர்ட், பேண்ட், பெட்சீட், துண்டு, பெண்களுக்கான நைட்டீஸ், கம்பளம், அரிசி, கோதுமைமாவு, பால் பெளவுர், மெழுகுவர்த்தி, மருந்து பொருட்கள், பிரஷ், பேஸ்ட், ரொட்டி, பிஸ்கெட், பெண்களுக்கான நாப்கீன்ஸ், கொசுவத்தி, எனச் சேகரிக்கப் பட்ட உதவிப் பொருட்கள் அனைத்தையும் 09-12-2015 புதன்கிழமை இரவு 10-00 மணியளவில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் நேரடியாக விநியோகம் செய்ய புறப்பட்டனர்.
பொருட்களை கன்டெய்னர் லாரியில் ஏற்றிய பின்னர், நாடர் சங்க தலைவர்கள் – பழனிச் சாமி நாடார், பாலசுந்தர நாடார், பி.எம். பள்ளி சுப்பிரமணி, எம்.ஜே. மோகன் மற்றும் சங்க நிர்வாகிகள் கொடியசைத்து ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
நன்கொடையாளர்களுக்கு பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் மனமார்ந்த நன்றியனைத் தெரிவித்துக் கொள்கின்றது.
திரு. கருணாகரன் அல்சூர்.

திரு. கண்ணியப்பன்
