மாண்புமிகு கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர் கவர்னர், போலீஸ் உயரதிகாரிகள் அடங்கிய குழுவிற்கு பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் பாதுகாப்பு கோரி கடிதம்

 

கர்நாடாகவில் அன்மைக் காலமாக தமிழர்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சிலர் கன்னடத் தமிழர் உறவை சீர் குலைக்கும் விதமாக தமிழ் பேனர்களை கிழிப்பது, தமிழ் எழுத்துக்களை அழிப்பது போன்ற  தமிழர்ளை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழர்கள் இன்று நேற்று கர்நாடகவில் குடியேறியவர்கள் அல்ல, மொழிவழி மாநிலம் பிரிவதற்கு முன்பிருந்தே இங்கே வாழ்ந்து வருபவர்கள். கர்நாடகத்தில் எவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு கன்னடர்களும் தமிழகத்தில் வாழ்கிறார்கள். அன்மைக் காலமாக வேண்டுமென்றே பிரச்சனை உருவாக்கி கன்னடர் தமிழர் மோதலை உருவாக்க நினைக்கிறார்கள். இது தொடர்பாக கன்னட அறிஞர்களுடன் பேசியுள்ளோம் அவர்களும் இச்செயலை கண்டித்துள்ளனர்.

மேலும் 16-02-2018 அன்று காவிரி வழக்கு தொடர்பான அனைத்து வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது, இதன் எதிரொலியாக தமிழர்களின், கடைகள், மற்றும் தமிழக வாகனங்களை ஒரு சில கும்பல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அருள்கூர்ந்து சென்ற ஆண்டு நடைபெற்றதைப் போன்று இவ்வாண்டும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்க் கொண்டு தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க பெங்களூர் தமிழ்ச் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

 

தி.கோ.தாமோதரன்                             எஸ். இராமசுப்பிரமணியன்

தலைவர்                                       செயலாளர்

பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்