நூலகம் / படிப்பகம்

தமிழ்க் காவலர் கலைஞர் கருணாநிதி கூடத்தில் கன்னட அறிஞர் சர்வக்ஞர் பெய்ரில் அமைந்துள்ள சங்க நூலகத்தில் ஏறத்தாழ 40,000க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன தமிழ் கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தொன்மங்கள் முதல் இற்றை இலக்கியங்கள் வரையில் நூல்கள் உள்லன. திருக்குறளுக்கென உள்ள இரண்டு பேழைகளில் பல் மொழிகளில் வெளிவந்த திருக்குறள் நூல்களும் உரை நூல்களும் குறள் ஆய்வு நூல்களும் உள்ளன. சங்க இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், திருவருட்பா, தொன்மங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், மொழியையல், அரசியல், பொருளியம், அறிவியல், வாழ்வியல், கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள் புதினங்கள் நாட்டு வரலாறுகள் எனப் பல்துறை நூல்களும் இடம் பெற்றுள்ளன. நூல்களைப் படிக்கும் ஆர்வமுடையோர் அனைவருடைய விருப்பங்களையும் நிறைவு செய்யும் வகையில் அமைந்துள்ள. நூல்கத்தை ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். கருநாடகப் பள்ள், கல்லூரிகளுக்கான தமிழ்ப் பாட நூல் குழுவினர்க்குப் பெரிதும் உதவி வருவது நம் நூலகமாகும். தற்போது நூற்பட்டியல் கணினியில் தரவேற்றம் செய்யப்பட்டு அதன் வழியே உறுப்பினர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நூலக்த்துடன் இணந்து இயங்கிவரும் படிப்பகத்தில், இடம்பெற்றுள்ள நாளேடுகள், பருவ ஏடுகள், சீரிதழ்களாம் சிற்றிதழ்கள் ஆகியவற்றை நாள் தோறும் பலர் படித்து இன்புற்று வருகின்றனர்.

சங்க நூலகத்திலும் தொல்காப்பியர் மாடத்திலும் உள்ள ஓவியங்களில் இடம் பெற்றுள்ள சான்றோர் பெருமக்கள்