சங்கத்தின் செயற்பாடுகளைப் போற்றிடும் வகையில் தஞ்சையில் இயங்கிவரும் தாய்த்தமிழ் அரக்கட்டலை சென்னையில் நடத்திய ‘திருக்குறள் தேசிய நூல்’ கருத்தரங்கில், தமிழ் மொழி இலக்கியத் தொண்டில் பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் இந்தியாவின் தலை சிறந்த தமிழ்ச் சங்கம் என்று தேர்ந்தெடுத்து விருது வழங்க்ச் சிறப்பித்தது.

2013 ஆகசுடுத் திங்கள் 16, 17 நாள்களில் மலேசியப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையும் , சென்னையின் கலைஞன் பதிப்பகமும் இணைந்து கோலலம்பூரில் நடத்திய மாநாட்டில்,”தமிழ்வேள்விக்கான மாசிலாமணி விருதினை” தமிழ்நாட்டிர்கு வெளியே சிறப்பாக செயற்படும் தமிழமைப்பு என்ர அடிப்படையில் நம் சங்கத்தையும் தில்லித் தமிழ்ச் சங்கத்தையும் தேர்ந்தெடுத்து சிறப்பிக்கப்பட்டன.

நாமக்கல்லில் இயங்கிவரும் “சின்னப்ப பாரதி அறக்கட்டளை” 2014 அக்டோபர்த் திங்களில் நம் சங்கத்திப் பாராட்டி விருதளித்துச் சிறப்பித்தது.