பெங்களூர் தமிழ் சங்கத்தில் பயிற்றுவிக்கும் வகுப்புகள்

அனைத்து வகுப்புக்களும் சீரிய முறையில் சிறப்பான ஆசிரியர்களால் நடத்தபடுகின்றன.

தமிழ் வகுப்பு

தமிழ் அறியாத பிற் மொழியினர்க்கும், தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத தமிழர்களுக்கும் தமிழ் வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றது. வெளிநாட்டவரும் நம் சங்கத்தில் தமிழ் பயின்ற்ய் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்: பேராசிரியர் கோவிந்தராசன்

கன்னட வகுப்பு

சங்கத்தில் இயங்கிவரும் கன்னட வகுப்பிற்கு நீண்ட வ்ரலாறு உண்டு. கருநாடகத்தில் கன்னட மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே கன்னட அறியாதவர்களின் நலனுக்காகக் கன்னட வகுப்புத் தொடங்கப்பெற்று நடைபெற்று வருகின்றது.. கருநாடக அரசுப்பணியாற்றுபவர்கள் பலர் அரசுத் தேர்வெழுதுவதற்கு முன்னர் அந்த மொழியில் தேர்ச்சி பெறுவதற்க்கு நம் கன்னட வகுப்பைப் பயன்படுத்தினர்.. கன்னடம் எழுத, படிக்க, பேசப் பயிற்சி அளிக்கப்படும் கன்னட வகுப்பில் இதுவரையில் ஆயிரக் கணக்கானோர் பயன் பெற்றுள்ளனர்.
ஆசிரியர்:

யோகா வகுப்பு

1976ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் யோக வகுப்பபால் ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் பயனடைந்துள்ளனர். இங்குப் பயிற்சி பெற்றோர் பலர் மாநில அளவிலும் இந்திய அளவிலிம் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வருகின்றனர். பொதுவான உடல்நலன் கருதியும் குறிப்பிட்ட நோய்களுக்காகவும் மக்கள் இந்த வகுப்பைப் பயன்படுத்தி வருகிறார்கள். யோக வழியினாள் அளிக்க்ப்படும் மருத்துவத்தாலும் பலர் பயனடைந்து வருகிறார்கள். ஆசிரியர்: ஆசிரியர்: வே. கோவர்த்தன்

நாட்டிய வகுப்பு

சஙத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் நாட்டிய வகுப்பில் இது வரையில் நூற்றுக் கணக்கானோர் நாட்டியப் பயிற்சி பெற்றுள்ளதுடன் பலர் நாட்டியக் கலைஞர்களாகவும் திகழ்கின்றனர். ஆண்டு தோறும் சலங்கை வழிப்பாடு நிகழ்த்தப்பட்டு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். சங்கம் நடத்தும் விழாக்களிலும் நாட்டிய வகுப்பு மாணவர்களின் நாட்டிய நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. ஆசிரியர்: இராஜு தத்தர்

கராத்தே வகுப்பு

சங்கக் கராத்தே வகுப்பில் இது வரையில், ஐந்து அகவையினர் முதல் பெரியவர்கள் வரை பன்னூற்றுவர் பயின்று பல்வண்ணப் பட்டிகளை வென்றுள்ளார்கள். இங்குப் பயிற்சி பெற்றோர் பலர் மாநில அளவிலும் இந்திய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வருகின்றனர். தொடர்ந்து மக்களை ஈர்க்கும் வகுப்பாகத் திகழ்ந்து வருகிறது. ஆசிரியர்: வி. கே ராஜசேகரன்

கைவினை வகுப்பு

சிறுவர்கள் தங்கள் கைவினைத்திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் இவ் வகுப்பு நடைபெற்று வருகின்றது. அவரவர் அகவைக்கும் திறமைக்கும் ஏற்றவாறு பல வகையான கைவினைக்கலைகள் கற்பிக்கப்படுகின்றன. ஆசிரியர்:

கருவி இசை

முத்தமிழின் ஒன்றான இசையை பயிற்றுவிக்கும் நோக்கில் கடந்த பல ஆண்டுகளாகச் சங்கத்தில் இசை வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றது. இங்குப் பயின்ற பலர் இசைக் கலைஞர்களாக உருவாகியுள்ளனர்.

ஏரோபிக்

உடற் பயிற்சி அளிக்கும் இந்த வகுப்புகள் இரு அணிகளாகக் காலையிலும் மாலையிலும் நடத்தப்பெற்று வருகின்றன. காலை அணி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 0630 மணி முதல் 0730 மணி வரையிலும் மாலை அணி வியாழன், வெள்ளிக் கிழமைகளில் மாலை 0700 மணி முதல் 0800 மணி வரையிலும் சனிக்கிழமை மாலை 0600 மணி முதல் 0700 மணி வரையிலும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு திங்களும் முதல் வாரத்தில் பயிற்சியாளர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். வகுப்புகள் ஆறு அகவைக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாருக்கும் நடத்தப்பெற்று வருகின்றன.

ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்பு ஒவ்வொரு திங்கள், புதன் கிழமைகளில் மாலை 0430மணி முதல் 0630 மணி வரையில் நடைபெறுகிறது.

திருப்புகழ் வகுப்பு

திருப்புகழ் வகுப்பு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

இலக்கிய வகுப்பு

இலக்கிய வகுப்பு: தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் இலக்கிய வேட்கையைத் தணிக்கும் வகையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இலக்கிய வகுப்பு நடைபெற்று வருகின்றது. சங்க இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இலக்கிய நுகர்ச்சியைச் சுவைபட எடுத்துரைப்போர்: முன்னிலை:முனைவர் பா.சு.மணி (ஆசிரியர், தினச்சுடர்) பேராசிரியர் சு.கோவிந்தராசன் புலவர் பெருமாள் கவிஞர் க,உ.கிருட்டிணமூர்த்தி