பெங்களூர் தமிழ்ச் சங்கம் - திணைக்களங்கள்

நூலகம் / படிப்பகம்

தமிழ்க் காவலர் கலைஞர் கருணாநிதி கூடத்தில் கன்னட அறிஞர் சர்வக்ஞர் பெய்ரில் அமைந்துள்ள சங்க நூலகத்தில் ஏறத்தாழ 40,000க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன தமிழ் கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தொன்மங்கள் முதல் இற்றை இலக்கியங்கள் வரையில் நூல்கள் உள்லன. திருக்குறளுக்கென உள்ள இரண்டு பேழைகளில் பல் மொழிகளில் வெளிவந்த திருக்குறள் நூல்களும் உரை நூல்களும் குறள் ஆய்வு நூல்களும் உள்ளன. சங்க இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், திருவருட்பா, தொன்மங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், மொழியையல், அரசியல், பொருளியம், அறிவியல், வாழ்வியல், கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள் புதினங்கள் நாட்டு வரலாறுகள் எனப் பல்துறை நூல்களும் இடம் பெற்றுள்ளன. நூல்களைப் படிக்கும் ஆர்வமுடையோர் அனைவருடைய விருப்பங்களையும் நிறைவு செய்யும் வகையில் அமைந்துள்ள. நூல்கத்தை ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். கருநாடகப் பள்ள், கல்லூரிகளுக்கான தமிழ்ப் பாட நூல் குழுவினர்க்குப் பெரிதும் உதவி வருவது நம் நூலகமாகும். தற்போது நூற்பட்டியல் கணினியில் தரவேற்றம் செய்யப்பட்டு அதன் வழியே உறுப்பினர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நூலக்த்துடன் இணந்து இயங்கிவரும் படிப்பகத்தில், இடம்பெற்றுள்ள நாளேடுகள், பருவ ஏடுகள், சீரிதழ்களாம் சிற்றிதழ்கள் ஆகியவற்றை நாள் தோறும் பலர் படித்து இன்புற்று வருகின்றனர். சங்க நூலகத்திலும் தொல்காப்பியர் மாடத்திலும் உள்ள ஓவியங்களில் இடம் பெற்றுள்ள சான்றோர் பெருமக்கள்.

மொழிபெயர்ப்புத் துறை

சங்கம் உருவான காலத்திலேயே சங்கம் தனக்கெனக் கட்டிடத்திஅப் பெற்று வளர்ந்த நிலையில் ஆராய்ச்சிப் பிரிவு தொடங்கப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பெற்றிருந்தது. கடந்த 2010 -12 பருவத்தில், சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை, பத்துப்பாட்டு நூல்களை முழுமையாகக் கன்னடத்தில் மொழிபெயர்த்திடுவதற்கான திட்டத்தின் வரைவை,ச் சங்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவணத்தின் பார்வைக்கு அனுப்பியது. சங்கம் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆறிவரும் சிறப்பு மிக்க பணியனைக் கருத்தில் கொண்டு அரும் பெரும் மொழிபெயர்ப்புப் பணி நம் சங்கத்திற்கு வழங்கப்பட்டது. தமிழாய்வு நிறுவனம் இதுவரையில் இப்பெரும் பணியினைப் பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே அளித்து வந்துள்ளது. முதன் முறையாக ஒரு தமிழ்ச் சங்கத்திற்கு இப்பணி அளிக்கப்பட்டிருப்பது சங்கத்திற்குக் கிடைத்த ஏற்பும் பெருமையும் ஆகும். இப்பணிக்காக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உரு 30,00,000/- த்தை நல்கையாக வழங்கியுள்ளது. சங்கத்தின் கனவாகிய ஆராய்ச்சிப் பிரிவு முதலில் மொழிபெயர்ப்புத் துறையுடன் தொடங்கப்பட்டுள்ளது.. கன்னட இலக்கியங்களைத் தமிழாக்கம் செய்யும் முற்சியிலும் சங்கம் இறங்கியுள்ளது. கருநாடக அரசின் கன்னட வளர்ச்சித் துறையுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் இரா.சீனிவாசன் மொழிபெயர்ப்புக் குழுவினர்

  • பேராசிரியர் தா. கிருட்டிண மூர்த்தி
  • பேராசிரியர் முனைவர் சங்கரி சீனிவாசன்
  • பேராசிரியர் பொன். க. சுப்பிரமணியன்
  • பேராசிரியர் நா. கிருட்டிணமூர்த்தி
  • பேராசிரியர் மலர்விழி
  • பேராசிரியர் அரங்கசாமி

கருத்தரங்கம்

திங்களுக்கு ஒரு முறை நிகழும் இக் கருத்தரங்கில். இலக்கியம், சமூகம், அரசியல், தலைவர்கள், நாட்டு நடப்புகள் சார்ந்த பல்வேறு தலைப்புகளில் கலந்து கொள்வோர் திறம்படக் கருத்துகளை வழங்கி வருகின்றனர். கருத்தரங்கில் அறக்கட்டளைப் பொழிவுகளும் இடம் பெறுகின்றன. தலைப்பை ஒட்டிய ஆய்திறனையும் சொற்பொழிவுத் திறனையும் வளர்க்க கருத்தங்கு பெரிதும் உதவி வருகின்றது.

ஏரிக்கரைப் பாட்டரஙகம்

திங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இப் பாட்டரங்கில் பாவலர்கள் தங்கள் பா இயற்றும் திறனைப் பல்வ்று தலைப்புகளில் வெளிப்படுத்தி வருகிறார்கள். நம் சங்கப் பாவலர்கள் தமிழகத்தில் நடைபெறும் பல பாட்டரங்குளில் கலந்து கொண்டும் விருதுகளைப் பெற்றும் வருகிறார்கள். பாவலர்கள் பாத் தொகுப்பு நூல்களையும் வெள்யிட்டு வருகிறார்கள்.

பதிப்புத்துறை

ஊற்று - சங்கத் திங்களிதழ் சிறப்பு மலர்கள்

ஏரிக்கரைப் மகளிர் துறை

மகளிர் துறை

இளைஞர் துறை

இளைஞர் துறை

திருமண மேடைத் துறை

திருமண மேடைத் துறை

ஓமியோபதி

1988 இல் சங்கத்தில் தொடங்கப்பெற்றா ஓமியோபதித் துறையில் இலவயமாக ஓமியோ மருத்துவம் அளிக்க்ப்படுகின்றது. பல்லாயிரக் கணக்கில் மக்கள் பயனடைந்துள்ளனர். இதற்கென ஒரு அறக்கட்டளையும் ரூ முதலீட்டில் நிறுவப்பட்டுள்லது. ஆண்டுதோறும் மருத்துவ மாமேதை சாமுவேல் ஆனிமன் பிறந்தநாளை ஒட்டி, மருத்துவக் கருத்தரங்கு நடைபெற்று வருகின்றது. ஓமியோ மாநாடுகளும் நடத்தப்பட்டுள்ளன. ஓமியோபதி வகுப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கண்ணிய மருத்துவர் பேராசிரியர் கு. பூங்காவனம்

கண் சொட்டு மருந்து முகாம்

கண் சொட்டு மருந்து முகாம் - மருத்த்வர்

இலவயக் கண் மருத்துவ / பல் மருத்துவ முகாம்

இலவயக் கண் மருத்துவ / பல் மருத்துவ முகாம்

குருதிக் கொடை முகாம்

குருதிக் கொடை முகாம்

வர்மக் கலை மருத்துவம்

வர்மக் கலை மருத்துவம்

பிராணிக் மருத்துவம்

பிராணிக் மருத்துவம்